SinhalaSriLankaEnglish (UK)

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்

 கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

 கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் ஏனைய நிதி சேவைகள் பற்றிய கூட்டுறவுச் சங்கங்கள் முறைப்படுத்தல்; தேசிய குழுவின் விசேட அறிவித்தல்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2013 ஜுலை 18ஆம் திகதியுடைய அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய, இலங்கை மத்திய வங்கியின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் மத்திய அரசின் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஃ பதிவாளர் மற்றும் சகல மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்களும் ஃ பதிவாளர்களின் வழிகாட்டலின் கீழ் 2013ஆம் ஆண்டு தொடக்கம் கூட்டுறவு விடயப் பொறுப்பான மத்திய் அரசின் அமைச்சினால் தாபிக்கப்பட்டுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் ஏனைய நிதி சேவைகள் பற்றிய கூட்டுறவுச் சங்கங்கள் முறைமப்படுத்தல் தேசிய குழு தாபிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தாபிக்கப்பட்டுள்ள தேசிய கூட்டுறவு வங்கிகள் முறைப்படுத்தல் பிரிவு மற்றும் மாகாண கூட்டுறவு வங்கி முறைப்படுது;தல் பிரிவினால் 1972ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க கூட்டுறவுச் சங்க சட்டம் மற்றும் ஒவ்வோர் மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாகாண கூட்டுறவு சமவாயத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டு நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் கூட்டுறவுச் சங்கங்கள் முறைப்படுத்தப்படும்.

அதன் பிரகாரம் தேசிய கூட்டுறவுச் சங்க முறைப்படுத்;தல் குழுவின் தீர்மானங்களுக்கு அமைய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்களால் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள், கட்டளைகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் யாவற்றையும் நிதி சேவைகளில் ஈடுபட்டுவரும் கூட்டுறவுச் சங்கங்கள் யாவும் கட்டாயம் பின்பற்றுவதற்கு கட்டுப்பட்டிருப்பதாக வலியுறுத்துகின்றோம்.

விசேடமாக கூட்டுறவுச் சங்கங்ளினால் சேர்க்கப்படும் எல்ல வைப்புகள் தொடர்பிலும் செலுத்தப்படும் வட்டி வீதங்களை தீர்மானித்தல் பற்றிய சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல் படிவங்கள் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் யாவற்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்;ளதால் நிதி அலுவல்களில்; ஈடுபட்டிருக்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதியை வைப்பிடுவதற்கு முன் நாட்டில் நிலவிவரும் பொதுவான வட்டிவீதங்களுக்கு மேலான வட்டிவீதத்தை வழங்கினால் அது தொடர்பில் வைப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் வேறு நிதி சேவைகள் கூட்டுறவுச் சங்கங்களில்  நிதி வைப்பிடப்படும்போது விசேடமாக இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டுள்ள வங்கிகளுக்கும் அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களுக்கு வழங்குமாறு பணிக்கப்படும் வட்டிவீதங்கள் பற்றி வைப்பாளர்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறு மேலும் தயவுடன் அறிவித்துக்கொள்கின்றோம்.

 

தேசிய கூட்டுறவு வங்கி முறைப்படுத்தல் குழு

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

இல.330, யூனியன் பிளேஸ், கொழும்பு 02.

 

தொ.இல – 011-2330706

பெக்ஸ் – 011-2330706

தொலைநகல்- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய