SinhalaSriLankaEnglish (UK)

வரலாறு

  • பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு கீழ்பட்ட காலத்தில் இருந்து தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார தேவைப்பாடுகளை நிறைவு செய்ய என 1906 வது வருடம் இலங்கை கூட்டுறவு சங்க முறைமை அல்லது கூட்டுறவு இயக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
  • இந்த புள்ளிவிபர ரீதியான கூட்டுறவு சங்கத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் அதற்காக வழிகாட்டல்கள், கண்காணிப்புகள் மற்றும் மேற்பார்வை செய்வதை கணிசமான தாக்கம் செலுத்த கூடிய அதிகாரங்களை கொண்ட 1911ம் வருடத்தின் இலக்கம் 01 ஐக் கொண்ட சட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கிணங்க இலங்கையின் கூட்டுறவு வியாபாரம் தொடர்பாக அரசின் மத்தியஸ்த செயற்பாடுகள் இந்த வருடத்தில் ஆரம்பமானது.
  • இந்த நாட்டின் உருவாக்கப்பட்ட முதலாவது கூட்டுறவு சங்கமாக வரலாற்றுப் பதிவேடுகளில் இருந்து தெரிய வருவது தும்பரமிட்டியவத்தை, கடன் வழங்கும் கூட்டுறவு சங்கமாகும்
  • அரச மத்தியஸ்தத்துடன் கூட்டுறவு சங்கப் பதிவாளர் பதவி நிலை உருவாக்கப்பட்டது. இந்த பதவி காரணமாக அல்லது பதவி நிலையில் 1911 முதல் 1930 வரை நியமிக்கப்பட்டவர் விவசாய பணிப்பாளர் ஆவார்.
  • 1930ம் வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கூட்டுறவு திணைக்களம் வேறுபடுத்தப்பட்ட தனியான திணைக்களமாக நிறுவப்பட்டது.
    டபிள்யு.கே.எச். கம்பல் அவர்கள் முதலாவது கூட்டுறவு ஆணையாளராகவும் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 1945ம் வருடம் கூட்டுறவு திணைக்களமானது கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் போது கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக பணி புரிந்தவர் குணசேன சொய்சா அவர்கள்.
  • 1957ம் வருடம் நாடு பூராகவும் வெவ்வேறு நோக்கத்திற்காக நிறுவப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு கடைச் சங்கங்கள் என்பன அதிகார பிரதேசவாரியாக ஒன்றிணைக்கப்பட்டு பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
  • பொருளாதார வியாபார முறைமைக்கு இசைவாக அல்லது ஏற்ற வகையில் 1971ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் மறுசீரமைக்கப்பட்டன. இதற்கிணங்க சங்கங்களின் அதிகார எல்லையை பரவலாக்கி வலுவான பொருளாதார அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டது.
  • 1989ம் வருடம் 13ம் அரசியல் அமைப்பு திருத்தத்தின் பின்னர் கூட்டுறவு விடயம் மாகாண சபைக்குரிய விடயமாக மாற்றம் பெற்றது.
  • இந்த அதிகார பரவலாக்கல் மூலம் மத்திய அரசின் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கடமைகள் அல்லது பணிகள் பின் வருமாறு அமைந்தன. மாகாண திணைக்களம் மற்றும் மத்திய அரசின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் இதற்கு மேலதிகமாக மத்தியரசின் திணைக்களத்துடன் அல்லது திணைக்களத்தின் கீழ் உயர்நிலை அல்லது தேசிய ரீதியான கூட்டுறவு சங்கங்கள் சம்மேளனங்கள் பூரணமான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை செய்யும் கடமைகளும் வழங்கப்பட்டது.
  • தேசிய மட்டத்திலான கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல், பாராளுமன்ற ஆலோசனை செயற்பாட்டு குழு, மற்றும் பொது மக்கள் முறைபாட்டு குழு (கமிட்டி) தொடர்பாக மாகாண தொடர்பாடல் சேவைகள் வழங்குதல் என்பன மத்திய அரசின் கூட்டுறவு திணைக்களத்தினால் செயற்படுத்தப்படுகின்ற சேவைகளாகும்.
  • கூட்டுறவு விடயத்துடன் தொடர்பான தேசிய மட்டத்திலான அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான கொள்கை வகுப்புக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் கூட்டுறவு வியாபாரம் தொடர்பாக புள்ளிவிபரவியல் அறிக்கை வெளியிடுதல் மத்திய அரசின் திணைக்களத்தின் மூலம் நிறைவேற்றப்படும் மேலும் ஒரு அபிவிருத்திச் செயற்பாடாகும்.

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய