SinhalaSriLankaEnglish (UK)

கணக்காய்வு

கூட்டுறவு சங்கங்களின் சிறப்பான நிர்வாகம் மற்றும் நிதி வலுத்தன்மை தொடர்பாகவும் அது தொடர்பான விடயம் சம்பந்தமாகவும் ஆழமான விசாரணை மற்றும் விசாரணை செய்து அதன் முன்னேற்றம் தொடர்பாக மீழாய்வு செய்து எடுக்க வேண்டிய நடைமுறைகளை உரிமையாளர்களாகிய அங்கத்துவர்களுக்கு தெரிவிப்பது எமது கடமையாகும்

எமது விடய பரப்பு எல்லை

  • சொத்துக்கள மற்றும் பொறுப்புக்களை உறுதிப்படுத்தல்
  • வருமான செலவீன ஒப்பிடுதல் அல்லது சரிபார்த்தல்
  • சங்கங்கள் சம்மேளனங்களின் நோக்கத்துக்கும் மற்றும் குறிக்கோளுக்கும் இசைவாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றதா என்பதை அறிக்கையிடுதல்
  • கூட்டுறவு சங்கங்களின் சட்டம், சங்க கணக்காய்வு விதிகளிற்கு இசைவாக செயற்படுகின்றதா என்று ஆராய்ந்து பார்த்தல்
  • சங்கத்தின் உறுதிப்பாட்டிற்கும் நிலைத்திருப்பதற்கும் ஏற்ற வகையில் செயற்படுகின்றதா என உறுதி செய்தல்
  • ஊழியர் பரிபாலனம் கூட்டுறவு திணைக்கள ஊழியர் சேவை ஆணைக்குழு மற்றும் நாட்டில் காணப்படும் சட்டத்திற்கும் இணங்கி செயற்படுகின்றனவா என ஆய்வு செய்தல்
  • உண்மையானதும் சாதாரணமானதும் என கணக்காய்வு நியமங்களுக்கும் மற்றும் ஒழுக்கங்களுக்கு அமைவாக கணக்குகள் பேணப்பட்டு வருகின்றனவா என ஆய்வு செய்தல்

எமது சட்ட ரீதியான அதிகாரம்

1972ம் ஆண்டின் 05ம் இலக்கம் கொண்ட கூட்டுறவு சங்க சட்டம் 44 வது பந்தியின் படி கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கூட்டுறவு சங்கம் கணக்காய்வு செய்தலுக்காக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரக்கு அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட வேறு உத்தியோகத்தரிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

பயனாளிகள்

  • சங்கத்தின் பணிப்பாளர், சபையினர் பொது சபை
  • சங்கத்தின் அங்கத்துவர்
  • அரசு மற்றும் அரச கொள்கை வகுப்பாளர்கள்
  • சங்கத்தின் ஊழியர்கள்
  • வங்கி மற்றும் கடன் வழங்குபவர்கள்
  • எதிர்கால கூட்டுறவாளர்கள்.

கணக்காய்வு செயற்பாட்டின் ஊடக கூட்டுறவு சங்கத்திற்கு கிடைக்கும் பயன்கள் நன்மைகள்

  • நிலையான தினத்தில் நிறுவனத்தின் சொத்துக்கள் பொறுப்புக்களின் நிலை அடையாளம் காண முடிகின்றமை
  • பிழையற்ற திருத்தமான தன்மை தொடர்பாக அடையாளம் காண முடிகின்றமை.
  • இலாபமீட்டும் சங்கங்கள் அங்கத்துவர்களுக்கு இலாப பகிர்வு பெற்று கொடுக்க முடிகின்றமை
  • எதிர்வரும் வருடம் தொடர்பாக வரவு செலவு மதிப்பிடு தயாரிக்க முடிதல்
  • வியாபார முடிவுகள் எடுக்க காரணமாக குறித்த மாதிரியின் ஊடாக வழி காட்டுதல்
  • சங்கத்தின் உறுதி தொடர்பான உறுதிப்பாட்டை வழங்குதல் அனாவசியமான மோசடி செயற்பாடு மற்றும் துர்நடத்தை மற்றும் அனாவசியமான வள பயன்பாடு தொடர்பாக வெளிகாட்ட முடிகின்றமை.

எமது தொடர்புகளுக்கு:

ஜே. எச். செனரத் பண்டார
உதவி ஆணையாளர் (கணக்காய்வு)
தெலைபேசி: +94 11 3136783
தொலைநகல்: +94 11 2478386

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய