SinhalaSriLankaEnglish (UK)

சட்டப்பிரிவு

பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்தை நிர்வாகம் செய்தல் கண்காணித்தல் மற்றும் நியதிச்சட்ட பணிகள் அல்லது கடைமைகள் மேற்கொள்ளும் போது ஏற்படும் சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தல். சட்ட ரீதியான வழிகாட்டல்களையும் ஆலோசணைகளையும் வழங்குதல் எங்களின் கடமையாகும்.

எமது விடய எல்லை

  • கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்தல்
  • சங்கங்களின் துணை விதிகளை அனுமதித்தல்
  • கூட்டுறவு சங்கங்களின் துணை விதிகளில் திருத்தம் அல்லது மாற்றம் செய்தல்
  • கூட்டுறவு சங்கங்களின் பிணக்குகளை தீர்த்து வைத்தல்
  • பிணக்குகளின் தீர்ப்பை வலுப் பெறச்செய்தல் மற்றும் அதனூடான நிதியை வசூலித்தல்
  • திணைக்களத்துக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல்
  • சட்டம் சம்பந்தமான தேவைப்பாடுகள் ஏற்படுகின்ற போது திணைக்களம் சார்பாக ஆஜராகுதல்
  • முன்னனுபவத்தின் மூலம் ஏற்பட்ட விளைவுகளின் ஊடாக அல்லது அடிப்படையில் கூட்டுறவு சங்க சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல்.

சட்டத்தின் தன்மை அல்லது பின்ணணி

1992ம் ஆண்டின் 01 இலக்க திருத்த சட்டம் மற்றும் 1983 ஆண்டின் 32ம் இலக்க திருத்த சட்டம் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கமைய அவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1972 ம் ஆண்டின் 05 ம் இலக்கம் கொண்ட கூட்டுறவு சங்க சட்டத்தின் மூலமும் 1973 ம் ஆண்டின் கூட்டுறவு சங்க விதிகளின் கோவையின் மூலமும் சட்டரீதியான சகல தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக சட்ட அனுமதி அல்லது அங்கீகாரம் கிடைக்கின்றது

கூட்டுறவு சங்கத்தை பதிவு செய்தல்

பதிவு செய்வதன் தேவைப்பாடுகள்
  • கூட்டுறவு சங்கம் ஒன்றிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்க பெறுதல்
  • நியதி சட்டத்தின் படியான கூட்டுறவு சங்கம் ஒன்றிற்கு உரிய சாதகமான தன்மைகளையும் அல்லது பயன்களையும் அனுபவிக்க கூடியதாக இருத்தல்.
  • ஓன்று சேரக்கூடிய அல்லது ஒன்றுபட்டு செயற்பட கூடிய தன்மை பெற்றுக் கொள்ளுதல்.
கூட்டுறவு சங்கமொன்றை உருவாக்குதல்.

பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் சங்கம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் அப்படி உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பு கூட்டுறவு சங்கமொன்றாக கூட்டுறவு சங்க ஆணையாளரிடம் பதிவு செய்வதற்கு குறைந்தது 06 மாதத்திற்கு முன்னராக தகுதிகாண் காலத்தில் சங்கத்தின் செயற்பாட்டை சரியான முறையில் பயனுள்ள மற்றும் வினைத்திறனுடனும் செயற்படுத்த வேண்டும். இதனால் தனிப்பட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்க பெறும்

கூட்டுறவு சங்கமொன்றை பதிவு செய்தல்

முதல் நிலை அல்லது ஆரம்ப கூட்டுறவு சங்கம் தொடர்பாக

  • நேரடி உறுப்பினர்களின் தொகையானது (குறைந்தது பத்து) பேர் ஆக இருத்தல் வேண்டும். இவர்கள் ஒன்றிணைந்த தங்களின் பொதுவான நோக்கங்களை நிறைவு செய்வதற்கென கூட்டுறவு கொள்கைகளுக்கு அமைவாக தேவையான தகமைகளை நிறைவு செய்ய தமது சங்கத்தை பதிவு செய்யுமாறு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக முறையாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
  • விண்ணப்பிக்க முன்னர் குறைந்தது 06 மாத காலமாவது குறித்த சங்கம் முறையாகவும் மற்றும் வினைத்திறனுடன் தொழில்பட்டது என்று அத்தாட்சிப்படுத்துவதற்கான சான்றிதழ் ஒன்றை கொண்டிருத்தல் வேண்டும்.
  • இந்த விண்ணப்பப் பத்திரத்தில் குறைந்தது உறுப்பினர்கள் பத்து பேர் (10) ஆவது கையொப்பம் இட்டு இருத்தல் வேண்டும்.

துணையான கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக

பல நோக்கங்களை கொண்டதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலான அல்லது ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் தங்களின் பொதுவான நோக்கங்களை நிறைவு செய்து கொள்ள வலுவுடன் செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக ஒன்றிணைந்து துணையான கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதற்க்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

இதற்காக முறையாக தயாரித்த விண்ணப்பப் படிவங்களை கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

  • விண்ணப்பிக்க முன்னர் குறைந்தது 06 மாதகால தகுதிகாண் காலத்தை இந்த சங்கமானது முறையாக மற்றும் வினைத்திறன் உள்ள வகையில் செயற்படுத்தி இருக்க வேண்டும். இப்படி செயற்பட்டமைக்கான சான்றிதழ் ஒன்றை கொண்டிருத்தல் வேண்டும்
  • இந்த விண்ணப்பப் படிவத்தில் உறுப்பினர் சங்கங்கள் குறைந்தது மூன்று உறுப்பினர்கள் (03) ஆவது தமது கையொப்பத்தை பதிவு செய்தல் வேண்டும்.
முன்னர் குறிப்பிட்ட பதிவுகள் தொடர்பாக மேலதிக தேவைப்பாடுகள் பின்வருமாறு,
  1. கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட எதிர்பார்க்கப்படும் சங்கத்தின் துணை விதிகள் இரண்டு பிரதிகள் (2).
  2. தற்காலிக முகாமைத்துவ பணிப்பாளர் சபையை அமைத்து அந்த பணிப்பாளர் சபையின் சிபார்சின் அல்லது அவர்கள் மூலம் முன்மொழியப்பட்ட துணை விதிகள் கூட்டுறவு சட்டம், மற்றும் கூட்டுறவு ஒழுங்குவிதிகள் என்பவற்றிற்கும் அமைவானது என்று சான்றுப்படுத்தல்
  3. முறையாக கூட்டப்பட்ட பொதுச்சபைக் கூட்டத்தில் (துணை விதியில் தேவைப்படுத்தப்பட்ட ஆகக் குறைந்த தொகையான உறுப்பினர்களின்) அறிக்கை ஒரு பிரதி (1) (இந்த பொதுச்சபையின் போது தங்களின் சங்கம் நிறுவுவதற்காகவும் தங்களினால் உருவாக்கப்பட்டதுமான துணை விதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தங்களால் நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ குழுவிடம் அல்லது பணிப்பாளர் சபையிடம் நிர்வாக பொறுப்பை கையளிப்பதாக பொதுசபை அறிக்கையில் தெரிவித்தல் வேண்டும்)
  4. சங்கத்தை வலுவுடன் செயற்படுத்த தேவையான பின்புலம் உள்ளதை சங்கத்தின் உறுப்பினர்களுக்காக முகாமைத்துவ குழாத்தினரால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் ஒன்று (சாத்திய கூற்று அறிக்கை) (இங்கு மொத்த அங்கத்துவர்கள் எண்ணிக்கை, நிதி முதலீட்டின் தன்மை தொழில் தரம், அதிகார பிரதேசத்தில் உள்ள இடம் அல்லது சொத்து அல்லது கட்டிடம் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்கள் தொடர்பான சிறிய அறிமுகம்)
  5. சங்கத்தின் பதிவு செய்வதற்காக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் வரையான சங்கத்தின் முன்னேற்ற அறிக்கை சங்கத்தின் ஆரம்ப உறுப்பினர்கள் அன்றைய தினத்தில் துணை விதியால் தேவைப்படுத்தப்பட்டுள்ள கொடுப்பனவுகளைச் செய்யபட்டுள்ளது என்பதற்க்கும் அவைகளை வங்கியொன்றில் வைப்பு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் அல்லது சான்றுப்படுத்தப்பட்ட அறிக்கை (உறுப்பினர் பங்குமுதல் மற்றும் நிலையான வைப்பு)
  6. பதவி தாங்குனர்களின் அல்லது உத்தியோகத்தர்களின் பூரணமான தகவல்கள் (பெயர், வயது, முகவரி, தொழில், கல்வி தகமை)
  7. சங்கத்தின் பொதுச் சபை கூட்டத்தில் அல்லது கூட்டங்களில் பங்கு பற்றியவர்களின் பெயர் பட்டியல்
  8. சங்கத்தின் அதிகார இடப்பரப்பு மற்றும் பாதை வரைபடம்
  9. ஒன்று சேரக்கூடிய தன்மையை வெளிப்படுத்தல்

உறுப்புரிமை

  • வயது 18 முதல் 35 வரை அதிகார பிரதேசத்தில் நிலையான வதிவிட முகவரி உள்ள அல்லது சொத்துள்ள கூட்டுறவு வியாபார மற்றும் கூட்டுறவு கொள்கையுடன் நற்பண்புகளையும் கொண்ட மனிதராக இருத்தல் வேண்டும்.

இந்த உறுப்பினர்களுக்கு சங்கத்தினுள் சனநாயக முறைப்படியான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளது.

உறுப்பினர்களை சேர்த்து கொள்ளல்

  • எவராவது ஒருவர் உறுப்பினராக இணைவதை நிர்ணயிப்பது குறித்த கூட்டுறவு சங்கத்தின் துணை விதிகளாகும்
  • ஏதாவது ஒரு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இணைவதற்கு ஒருவருக்கு அனுமதி மறுக்கப்படுமாயின் குறித்த நபர் அதற்கு எதிராக கூட்டுறவு சங்க பதிவாளரிடம் முறையீடு செய்ய முடியும் என்பதுடன் அது சம்பந்தமாக பதிவாளரினால் வழங்கப்படும் தீர்ப்பு இறுதியானதும் முடிவானதுமாகும் என்பதுடன் கூட்டுறவு சங்கமானது அத்தீர்மானத்துக்கு கட்டுப்பட்டது.
  • எப்படியாயினும் சட்டத்திலும் துணை விதியிலும் குறிப்படப்பட்ட தகமைகள் இல்லாத நபர்களின் உறுப்புரிமையானது வழங்கும் படியான தீர்மானம் இயற்றும் அதிகாரம் பதிவாளருக்கு இல்லை கூட்டுறவு சட்டத்தின் 60 (1) பந்தி
பதிவின் பின்னர் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்.
  • ஆலோசனை மற்றும் கண்காணிப்புக்காக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமித்தல்
  • நல்லாட்சிக்கு அல்லது சிறந்த முகாமைத்துவத்துக்கு தேவையான நிதி முகாமைத்துவ ஆலோசணை. அபிவிருத்தி முகாமைத்துவ ஆலோசனை ஊழியர் முகாமைத்துவ ஆலோசனை என்பவற்றை பெற்றுக் கொடுத்தல்.
  • வருடாந்த கணக்காய்வு செயற்பாடுகள்
  • நோக்கம் அல்லது குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக திட்டம் மற்றும் கருத்திட்டம் என்பனவற்றை அடையாளம் காணுதல், அல்லது வழிகாட்டுதல் அனுமதியளித்தல், அத்தாட்சிப்படுத்தல், ஆலோசனை சேவை மற்றும் நிதி வழங்கும் அல்லது ஒழுங்கு செய்யும் செயற்பாடுகள்.

கூட்டுறவு சங்க்தின் துணை விதிகள்

  • கூட்டுறவு சங்கத்தின் உள்ளக ஒழுங்கு கோவையாக இருப்பது துணை விதிகளாகும். இதற்கு சட்டரீதியான அங்கிகாரம் கிடைக்கப்பெறுவது சங்கத்தின் பொதுச்சபையின் மூலம் அந்த துணை விதிகள் ஏற்று கொள்ளப்பட்ட பின்னர் பதிவாளரினால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆகும்.

நிர்வாக ஒழுங்கு விதிகளின் கோவை

சாதாரணமாக நாளாந்தச் செய்பாடுகளை செய்வதற்காக கூட்டுறவு சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் என்பனவற்றிற்கு இணங்கி அதற்குக் கீழ் நிர்வாக ஒழுக்க விதிகளின் கோவை செயற்பட முடியும்.

துணை விதிகளில் மாற்றம் செய்தல்

  • பதிவு செய்யப்பட்ட துணை விதிகளை அகற்றுதல், திருத்தம் செய்தல், புதிய துணை விதிகளின் கோவையை தயாரித்தல் என்பன துணை விதிகளில் மாற்றம் எனக் கருதப்படமுடியும்.
  • ஒழுக்க கூட்டுறவு விதிக் கோவை 33 வது விதிக்கோவைக்கு அமைவாக மாற்றம் செய்யப்படலாம் அந்த மாற்றம் பதிவு செய்யும் வரை சட்டரீதியானதல்ல

துணைவிதி மாற்றம் செய்வதற்காக சமர்பிக்கப்படும் போது பின்வரும் ஆவணங்கள் அல்லது தகவல்கள் அடங்கிய கோப்பு ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்

  • பொது சபை கூட்டத்தை கூட்டுவதற்கான அழைப்பிதழின் பிரதி ஒன்று.
  • பொது சபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலின் பிரதி ஒன்று
  • துணை விதிகளின் மாற்றம் செய்ய என பொதுச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது சபை கூட்டத்தின் அறிக்கையின் பிரதி ஒன்று.
  • பொது சபை கூட்டத்திற்கு வந்தவர்களின் வரவு சான்றிதழ்.
  • துணை விதிகளில் மாற்றம் சட்டத்துக்கு இணங்க செய்யப்பட்டது என்றும் கூட்டுறவு விதி கோவை 33 வது பிரிவுக்கு இணங்க செய்யப்பட்டது என்றும் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கையெழுத்திட்ட அறிக்கை.
  • துணை விதி மாற்றம் கூட்டுறவு சட்டம் மற்றும் கூட்டுறவு விதிகளின் கோவைக்கு எதிரானது அல்ல என்றும் கூட்டுறவு விதிகளின் கேவைக்கு அமைவானது என பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ்.
  • மாற்றம் செய்ய எதிர்பார்க்கும் துணைவிதி பகுதிகள் அடங்கிய பிரதிகள் இரண்டு
  • குறித்த கூட்டுறவு சங்கத்தின் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள துணைவிதிகள்
  • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் அத்தாட்சிப்படுத்தல் கடிதம்.

நீதிமன்ற முறைக்கு நிகரான அல்லது ஒப்பான செயற்பாடுகள்

கூட்டுறுவு சங்கத்தின் பிணக்குகள் என்பது?

  • பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கம் மற்றும் பின்வரும் திறத்தவர்களுக்கிடையிலான வேறுபாடுகள் அல்லது கருத்து முரண்பாடுகள் பிணக்குகளாக கருதப்படுகின்றன.
  • இந்த பிணக்குகள் நடுத்தீர்ப்புக்காக பதிவாளிரிடம் முன்வைக்கப்படும். இதன் பின்னர் பதிவாளரினால் நியமிக்கப்படுகின்ற உத்தியோகத்தர் ஒருவர் நடுவராக செயற்பட்டு சட்டரீதியாகவும் நியாயமான முறையிலும் தீர்த்து வைக்கப்படும்.

பிணக்குகள் ஏற்படக்கூடிய திறந்தவர்கள்.

  • ஏதிர்கால அல்லது தற்போதைய உறுப்பினர்கள் அல்லது அவர்களினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களின் உரித்துடைய நபர்கள்.
  • காலம் கடந்த அல்லது முன்னாள் அல்லது தற்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் சட்டரீதியான பிரதிகள், காலஞ்சென்ற பணிபாப்ளர் சபை உறிப்பினர்களின் முறையான உரித்துடையவர்கள்.
  • காலஞ்சென்ற அல்லது தற்போதைய உத்தியோகத்தர்கள் அவர்களின் சட்டரீதியான உத்தியோகத்தரின் முறையான உரிமையாளர்கள் என்பவர்களுக்கிடையோயான பிணக்குகள்.

பிணக்குகள் ஏற்படக்கூடிய முறைகள் (நிதி சார் மற்றும் நிதி சாரா பிணக்குகள்)

  • முன்னர் குறிப்பிட்ட திறந்தவர் மற்றும் பதிவு செய்த கூட்டுறவு சங்கத்திற்க்குமிடையில்
  • பதிவு செய்த கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் ஒரு பதிவு செய்த கூட்டுறவு சங்கத்திற்குமிடையில்
  • பதிவு செய்த கூட்டுறவு சங்கத்திற்கும் அந்த கூட்டுறுவு சங்கத்தின் பணிப்பாளர் சபைக்குமிடையில்
  • கூட்டுறவு சங்கம் ஒன்றை குலைக்கும் செயற்பாட்டினை செய்கின்ற குலைப்பாளர் மற்றும் மேல் குறிப்பிட்ட திறந்தவர்களுக்குமிடையில்
  • குலைப்பாளர் மற்றும் மூன்றாம் தரப்புக்குமிடையில்
  • பதிவு செய்த கூட்டுறவு சங்கம் மற்றும் அந்த சங்கத்தின் இணை உறுப்பினர்கள் (வாக்களிக்கும் உரிமையற்ற உறுப்பினர்கள்) இடையில்

பிணக்கொன்று ஏற்பட்டது முதல் நடுத்தீர்ப்பு ஒன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் வரையான செயற்பாட்டு நடைமுறைகள்

  1. பிணக்கிற்கான காரணத்தை சரியான முறையில் அடையாளம் காணுதல்
  2. கூட்டுறவு சங்கத்தின் மூலம் முதலாவது நியாயமானதும் நீதியானதுமான விசாரணையை நடத்தி சமாதானமான முறையில் சரி செய்ய நடவடிக்கை எடுத்தல்
  3. சமாதானமான தீர்வு எட்டப்படாதவிடத்து மேல் நடவடிக்கைக்காகவும் சட்டரீதியான செயற்பாடுகளுக்காகவும் பணிப்பாளர் சபைக்கு முன்வைத்தல்
  4. நடுத்தீர்ப்புக்கு உட்படுத்துவதற்கான முன் அறிவித்தல் விடுதல், நடுத்தீர்ப்பு செயற்பாட்டிற்கு உட்படுத்தல் தொடர்பான தீர்மானம் எடுத்தல் வேண்டும்.

பிணக்கொன்று திணைக்களத்திடம் முன்வைக்கப்படும் போது.

This should be sent to the cooperative society registrar for the mediation after the decision taken by the director board.

Order of steps to be taken,

  1. பணிப்பாளர் சபை தீர்மானத்தின் பின்னர் நடுத்தீர்ப்பு செயற்பாட்டிற்காக கூட்டுறவு சங்க பதிவாளரிடம் விண்ணப்பித்தல் வேண்டும்.
  2. அது தொடர்பான செயற்பாடுகள் பின்வருமாறு அமையும்.
    1. அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள படி தொகையை குறித்த திகதியில் செலுத்த தவறியிருப்பின் குறித்த திகதியில் இருந்து 30 நாட்களுக்குள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    2. பிணக்குகளை சமர்ப்பிக்கும் போது குறிதத கோவையில் பின்வரும் ஆவணங்கள் அடங்கியிருத்தல் வேண்டும்
    3. நடுத்தீர்ப்பு ஒன்றை விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்பத்திரம்.
    4. நடுத்தீர்ப்புக்கு உட்படுத்துவது என்ற பணிப்பாளர் சபை முடிவினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த பணிப்பாளர் சபை அறிக்கையின் குறித்த பகுதி சங்கத்தின் சட்டரீதியாக அங்கிகரிக்கப்பட்ட முத்திரை செயலாளர் மற்றும் தலைவர் அல்லது துணை தலைவரின் கையோப்ப சான்றுகளுடன்.
    5. அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்தின் அல்லது பத்திரம் அத்தாட்சிப்படுகத்தப்பட்ட பிரதி ஒன்று
    6. கோரிக்கை பத்திரம் அனுப்பப்பட்டது என்பதற்கான ஆதாரம் (உம் பதிவு தபால் பற்று சீட்டு)
    7. சட்ட முகவர் ஒருவர் நியமித்து அதிகாரம் வழங்கியமைக்கான கடிதம்.
    8. பிணக்குகளின் நடுத்தீர்ப்பின் போது விசாரணையின் போதும் முன்வைக்க என எதிர்பார்க்கின்ற வாய் மூலமானதும் மற்றும் எழுத்து மூலமான சாட்சி ஆவணங்கள்.
    9. இணக்கப்பாடு ஒன்றுக்கு வரமுடியாமைக்கான காரணங்கள் அடங்கிய கடிதம் அல்லது சான்றுகள்
    10. நடுத்தீர்ப்பு கட்டணம்

பொது விடயங்கள்

  • ஆரம்ப நிலை விசாரணையின் போது அல்லது பரிசோதனையின் போது தொடங்கி பிணக்குகள் நடுத்தீர்ப்புக்கு கையளிக்கும் வரையான செயற்பாடுகளின் போது தேவையான ஆலோசனை, வழிகாட்டல் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கும் போது சரியான முறைமையை பின்பற்றுதுல் என்பவற்றுக்கு வழிகாட்டுதல் என்பன குறித்த கூட்டுறவு சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக உறுதிபடுத்தி கொள்ளப்படல் வேண்டும்.
  • சகல கடிதங்களும் பிழைகளற்ற முறையில் தெளிவாகவும் வழங்கப்பட வேண்டும்
  • ஆரம்ப நிலை பரிசோதனை அறிக்கை தொடங்கி நடுத்தீர்ப்பு மற்றும் நீதிமன்ற மூலம் நடுத்தீர்பாணையை வலுப்பெறச் செய்யும் அல்லது பயனுறச் செய்யும் வரையுமான கடிதங்கள் ஒவ்வொன்றும் ஆவணங்களாக கோப்புக்களில் பிணக்குக்கு ஒரு கோப்பு என்ற வகையில் சங்கத்தினால் நடாத்தி செல்லப்பட வேண்டும்.
  • நடுத்தீர்ப்பாளரின் தீர்ப்பில் திருப்திடையாத திறந்தவர் தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியில் இருந்து 30 நாட்களுக்குள் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளரிடம் மேன் முறையீடு செய்ய முடியும்.

மேன் முறையீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை

  • மேன்முறையீடு செய்ய தீர்மானித்த பணிப்பாளர் சபை முடிவுகள் அல்லது தீர்மானம் அடங்கிய அறிக்கையின் பகுதி அத்தாட்சிப்படுத்தலுடன் (சங்கங்களுக்கு மட்டும்)
  • மேன்முறையீடு செய்வதற்கான காரணத்தை தெரிவித்தல்
  • மேன்முறையீட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் நிவாரணம்.

எமது தொடர்புகளுக்கு:

ஜே.எச். செனரத் பண்டார
உதவி ஆணையாளர் (சட்டப்பிரிவு)
தொலைபேசி: +94 11 3136783
தொலைநகல்: +94 11 2478386

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய